தென்காசி பகுதியில் “என் மண் என் மக்கள்” என்பதன் அடிப்படையில் பாஜகவினர் பாதயாத்திரை மேற்கொண்டனர். இதில் பங்கேற்ற பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை தென்காசி கீழப்புலியூர் பகுதியில் தனது பாதயாத்திரையை தொடங்கி வாய்க்கால் பாலம், ஆயிரப்பேரி விலக்கு, நகராட்சி அலுவலகம், பழைய பஸ் நிலையம், தென்காசி மேம்பாலம், வழியாக தென்காசி புதிய பஸ் நிலையம் வரை பாதயாத்திரை மேற்கொண்டார். அப்போது ஆயிரப்பேரி விலக்கு அருகே பெண்கள் முளைப்பாரி எடுத்து வரவேற்பு கொடுத்தனர். தென்காசியில் பாதயாத்திரை மேற்கொண்ட பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை பேசும் போது 10 மணிக்கு மேல் பேசுவதற்கு அனுமதி இல்லை. எனவே கால தாமதமாக வந்ததற்கு முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தென்காசியில் ஆறு கிலோ மீட்டர் தொலைவைக் கடப்பதற்கு மூன்றரை மணி நேரம் ஆகிவிட்டது. இவ்வளவு கூட்டத்திற்கும் பேசாமல் சென்றால் நன்றாக இருக்காது. எனவே இந்த மாதம் முடிவதற்குள் பாதயாத்திரைகள் ஒரு நாள் விடுப்பு எடுத்து ஒரு பொதுக்கூட்டம் நடத்தி உங்கள் மத்தியில் நிச்சயம் உரையாற்றுவேன். இந்த பாதயாத்திரையின் போது பொதுமக்கள் திரண்டு வந்து வரவேற்பு தருவதை பார்க்கும் போது 2024 இல் மீண்டும் தலைமையிலான பாஜக ஆட்சி அமையும். நரேந்திர மோடி மீண்டும் பாரத பிரதமராக வருவார் இவ்வாறு அவர் பேசினார்.
இந்தப் பாதயாத்திரையின் போது அண்ணாமலையுடன் தமிழ்நாடு பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், தென்காசி மாவட்ட பாஜக தலைவர் கே.ஏ. ராஜேஷ் ராஜா, தென்காசி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளரும் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில துணைத் தலைவருமான வாசுதேவநல்லூர் அ. ஆனந்தன், மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன், மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், மாநில பொதுச் செயலாளர் பொன் பால கணபதி, தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம், தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான் பாண்டியன், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.வி. அன்புராஜ், மாநில பாதயாத்திரை மாநில பொறுப்பாளர் நரேந்திரன், இணைப் பொறுப்பாளர் அமர் பிரசாத் ரெட்டி, தென்காசி மாவட்ட பொதுச் செயலாளர்கள் பாலகுருநாதன், அருள்செல்வன், ராமநாதன், பொருளாளர், பாலகிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர் தென்காசி எஸ். முத்துக்குமார், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராமராஜா, பாண்டித்துரை, பட்டியல் அணி மாவட்ட பொதுச் செயலாளர் முருகன், வழக்கறிஞர் பிரிவு தலைவர் எம். கார்த்திகேயன், பிற்படுத்தப்பட்டோர் அணி செயலாளர் கண்ணன், அமைப்புசாரா செயலாளர் லிங்க வேல்ராஜா, பாஜக ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் குற்றாலம் செந்தூர் பாண்டியன், சாரல் அருணாசலம், மகாதேவன், தென்காசி பாஜக நிர்வாகிகள் மந்திர மூர்த்தி, சங்கர சுப்பிரமணியன், சு. கருப்பசாமி, எல்.ஜி. குத்தாலிங்கம், பாஜக மாவட்ட செயலாளர்கள் சுப்பிரமணியன், ராஜலட்சுமி மற்றும் பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









