மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதிகளில் பிஜேபி மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிகுமாரை , பதவி நீக்கம் செய்யக்கோரிஅக்கட்சியினர் கண்டனம் தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர்.பிஜேபிக்கும், பெண்களுக்கும் அவப்பெயரை ஏற்படுத்திய சசிகுமார் மீது நடவடிக்கை எடுத்து அவரை பதவி நீக்கம் செய்யக்கோரி , பிஜேபி கட்சியினரால் அடித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, பிஜேபி மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிகுமாருக்கும் , அவரது மனைவி செல்விக்கும் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையால், மேலும் சசிக்குமாருக்கும் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த பிஜேபி பெண் நிர்வாகி ராஜேஸ்வரிக்கும் தொடர்பு இருப்பதாக சசிக்குமாரின் மனைவி செல்வி , திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவமும் சர்ச்சையை ஏற்பட்டுள்ளது..
செய்தியாளர் வி காளமேகம்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









