பாஜகவின் புதிய தேசிய தலைவராக பதவி ஏற்றார் நிதின் நபின்…

பாஜக தேசியத் தலைவராக நிதின் நபின் பதவியேற்றார். 45 வயதான நிதின் நபின் தற்போது பாஜகவின் 12வது தேசியத் தலைவராகியுள்ளார். பாஜக தலைமையகத்தில் முறையான செயல்முறைகள் முடிந்த பிறகு, இன்று பிரதமர் மோடி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் பல மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இதன்மூலம் பாஜகவில் குறைந்த வயதில் தேசிய தலைவர் பொறுப்பை வகிப்பவராக நிதின் நபின் மாறியுள்ளார். முன்னதாக, அமித் ஷா தனது 49 வயதில் தேசிய தலைவர் பதவியை ஏற்றார். ஜே.பி. நட்டா 2020 முதல் கட்சியின் தேசியத் தலைவராக இருந்தநிலையில், அவரது பதவிக்காலம் 2024 இல் முடிவடைந்தது. ஆனால் தேர்தல் போன்ற காரணங்களால் பதவி நீட்டிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பாஜக தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று (ஜன, 19 ) நடைபெற்றது. இத்தேர்தலுக்கு வேறு எந்த வேட்பாளரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் நிதின் நபின் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.தேசிய தலைவராக நிதின் நபின் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு அவருக்கு இசட்-பிரிவு பாதுகாப்பை வழங்கியுள்ளது. இன்று காலை அவர் பதவியேற்பதற்கு முன்பு இந்த முடிவு எடுக்கப்பட்டது. முன்னதாக, ஜே.பி. நட்டாவும் இதே போன்ற பாதுகாப்பைப் பெற்றார்.

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!