அந்த துண்டு பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது வருமாறு;
வஞ்சக பாஜகவுடன் சேர்ந்து அடிமை அதிமுக தமிழ்நாட்டுக்கு செய்த துரோகப் பட்டியல்!
நீட் தேர்வை தமிழ்நாட்டில் அனுமதித்து மாணவ மாணவியரின் உயிரை பறித்தது.
நானும் விவசாயி என்று வேடம் போட்டு மூன்று வேளாண் சட்டத்திற்கு ஆதரவு,
சிறுபான்மை மக்களுக்கு எதிரான சிஏஏ சட்டத்திற்கு ஆதரவு,
மின்சார கட்டண உயர்வுக்கு காரணமான உதய் மின் திட்டத்திற்கு ஆதரவு,
இஸ்லாமியர்களை இரண்டாம் தரவகுடிமக்களாக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு,
இதுபோன்ற மேலும் பல்வேறு,பாதகங்களுக்கு துணைபோன போன பழனிச்சாமி இந்தித் திணிப்பு நிதிப்பகிர்வில் பாரபட்சம் கல்விநிதி மறுப்பு தொகுதி மறுசீரமைப்பு- என பாஜக அரசின் அனைத்து துரோகங்களுக்கும் துணை நின்று கூட்டணி அமைத்துள்ள அடிமை அதிமுகவின் முகத்திரையைக் கிழித்து விரட்டி அடிப்போம்! வஞ்சக பாஜக துரோக அதிமுக கூட்டணியிடமிருந்து தமிழ்நாட்டை பாதுகாப்போம்! நீட் துரோகிஅதிமுக என்கிற வாசகங்களை அடக்கிய பிரசுரங்களை திமுகவினர் மாநிலம் முழுவதும் மக்களுக்கு விநியோகம் செய்தனர்.
You must be logged in to post a comment.