முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மறைவு…! இந்தியாவிற்கு பேரிழப்பு..

மறைந்த சுஷ்மா சுவராஜ்க்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி , பிரதமர் .தமிழக ஆளுநர், முதல்வர் .துணை முதல்வர், திமுக தலைவர் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் இரங்கல் தெரிவித்து உள்ளன.கீழை நியூஸ், சத்தியபாதை குழுமம் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்

முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவருமானதிருமதி சுஷ்மா சுவராஜ் அவர்களின் மறைவு இந்தியாவிற்கு மாபெரும் இழப்பாகும். குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி செல்லும்போது இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் மீதும் வெளிநாடுகளில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு தாயகத்திற்கு கொண்டு வந்ததும் மற்றும் அரபு நாடுகளில் வேலைக்கு சென்று அங்கு பெரும் துயரத்திற்கு ஆளான தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்களை மீட்டெடுத்து தாயகத்திற்கு கொண்டு வந்து சேர்த்த பெருமை திருமதி சுஷ்மா சுவராஜ் அவர்களையே சாரும். அனைவரையும் இன்முகத்துடன் அரவணைத்து செல்லும் ஆற்றல் குணம் படைத்தவர். ஒரு தலை சிறந்த நிர்வாகியை நாடு இழந்து விட்டது. அம்மையாரின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாறவும் அம்மையாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் மற்றும் பாஜக தொண்டர்களுக்கும் மாபெரும் இழப்பாகும். அம்மையாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஏக இறைவனிடம் பிரார்த்தனைசெய்கி ன்றேன்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!