திருப்பரங்குன்றம் விவகாரம் – 144 தடை உத்தரவு காரணமாக உசிலம்பட்டி அருகே மதுரை மாவட்ட எல்லை பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை கோவில் விவகாரம் தொடர்பாக இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.,இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மாவட்ட எல்லை பகுதியில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.,இதன் ஒரு பகுதியாக உசிலம்பட்டி அருகே ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் தேனியிலிருந்து மதுரை நோக்கி வரும் கார் மற்றும் பேருந்துகள், உத்தப்பநாயக்கணூர் பகுதியில் திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து வரும் வாகனங்களையும் உசிலம்பட்டி டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையிலான போலீசார் பலத்த சோதனைக்கு பின் அனுமதித்து வருகின்றனர்.,கார் மற்றும் பேருந்துகளில் சோதனை செய்வதோடு, மதுரை மாவட்ட எல்லைக்குள் வரும் வாகனங்களின் எண்களையும் சேகரித்து வருகின்றனர்.,
தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடையை மீறி திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல முயன்ற மேக்கிலார்பட்டியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி முருகன் மற்றும் தினகரன் ஆகியோரை உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலீசார் அழைத்து வந்து உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.
You must be logged in to post a comment.