உசிலம்பட்டி அருகே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்றோர் இல்லத்திற்கு 2 மாததிற்கான உணவுக்கான பொருட்களை வழங்கி திமுவினர் அறுசுவை விருந்து அளித்தனர்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள திமுக நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூரில் இயங்கி வரும் தனியார் ஆதரவற்றோர் இல்லத்திற்கு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு உசிலம்பட்டி திமுக நகர் கழக செயலாளர் தங்கப்பாண்டி தலைமையிலான திமுக நிர்வாகிகள் 2 மாததிற்கு தேவையான உணவிற்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கினர்.தொடர்ந்து அனைவருக்கும் அறுசுவை உணவு விருந்தாக அளிக்கப்பட்டது, நகர செயலாளர் தங்கப்பாண்டியும் ஆதரவற்ற குழந்தைகளுடன் அமர்ந்து உணவு உட்கொண்ட நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நலமுடன் வாழ பிராத்தனை செய்தனர்.தமிழக முதல்வர் உதயாநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்  நலத்திட்ட ஏற்பாடு மற்றும் உசிலம்பட்டி நகர திமுக செயலாளர் எஸ் ஓ ஆர் தங்கப்பாண்டியன் தலைமையில் 

பொதுக்குழு உறுப்பினர், சரவணகுமார் , மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் கல்யாணி, அமைப்பாளர் குபேந்திரன், நகர அவைத் தலைவர் சின்னன், நகர துணைச் செயலாளர் உதயபாஸ்கரன், நகர பொருளாளர்,தூ.க.ஜெயப்பிரகாஷ், ஆகியோர் முன்னிலையில் உத்தப்ப நாயக்கனூர் மனிதநேய மகாத்மா ஜோதி வளர்ச்சி அறக்கட்டளைக்கு தேவையான பலசரக்கு மட்டும் மல்லிகை பொருள்கள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் வடக்கு ஒன்றிய அவைத் தலைவர் பெத்தணன், எபினேசர், மாவட்ட இளைஞர் அணி ஜெகன், மாணவரணி பிரபு, மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை அமைப்பாளர் அலெக்ஸ்பாண்டியன், உசிலம்பட்டி தொகுதி ஒருங்கிணைப்பாளர் பிரவீன் நாத், சின்னப்பாண்டி, மாவட்ட பிரதிநிதி வீரா தினேஷ், கழக முன்னணியினர் பாறைப்பட்டி ராமசாமி, பாண்டீஸ்வரர், தசரதபாண்டி, சர்ச்சி,  இளைஞரணி  நிர்வாகிகள் சுஜேந்திரநாத், வேட்டு ஜெயராமன், அருண்குமார், தமிழரசன், சரவணன், ராமராஜன், சரத், பால்வீரணன், அன்பில் உதயா, பெருமாள், மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர். நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முடிவில் மனிதநேய மகாத்மா ஜோதி வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் மல்லிகா நன்றி கூறினார். 

உசிலை மோகன்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!