கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களிலும் வீடுகளில் கூடு கட்டி சிறகடித்துப் பறந்து கொண்டிருந்த சிட்டுக்குருவிகள் இன்று காண்பதற்கே அரிதாகி வருகின்றன. அழிவின் விளிம்பில் சிட்டுக்குருவிகள் உள்ள நிலையில் மார்ச் 20-ம் தேதி உலக சிட்டுக்குருவி தினமாக கடைபிடிக்கப்படுகின்றது.
இந்நிலையில் திருச்சியை சேர்ந்த யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், கீர்த்தனா குடும்பத்தினர் பறவைகளுக்காக வீட்டில் கூடு வைத்து
அதை பாதுகாக்க முயற்சி எடுத்து வருகின்றனர். இதற்காக இவர்கள் தங்கள் இல்லத்தில் தாங்களே தயாரித்த தேங்காய் நாரினால் ஆன கூடுகளை அமைத்து பறவைகளுக்கான உணவும் நீரினையும் வழங்கி வருகின்றனர்.
அதை பாதுகாக்க முயற்சி எடுத்து வருகின்றனர். இதற்காக இவர்கள் தங்கள் இல்லத்தில் தாங்களே தயாரித்த தேங்காய் நாரினால் ஆன கூடுகளை அமைத்து பறவைகளுக்கான உணவும் நீரினையும் வழங்கி வருகின்றனர்.இது குறித்து அவர்கள் கூறுகையில் “சிட்டுக்குருவிகள் மனிதர்கள் வாழும் வீடுகளில் பயமின்றி வாழ்ந்த காரணத்தால் மனையுறை குருவி என்று சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது.
பூச்சிக்கொல்லி மருந்துகளை தானியங்கள் , பயிர்கள் மற்றும் செடிகளுக்கு தெளிப்பதால் அதனை உண்ணும் பறவை இனங்கள் பாதிப்படைகின்றன. நீர், நிலம் ,காற்று மாசுபடுவதால் காடுகள் அழிக்கப்படுவதாலும் சிட்டுக்குருவிகள் நம்மை விட்டு பிரிந்து வருகின்றன. சிட்டுக்குருவிகளைக் காப்பாற்ற வேண்டியது நமது ஒவ்வொருவரின் கடமையாகும்.
ஒவ்வொரு வீட்டிலும் வீட்டு பகுதிகளில் குருவிகள் கூடு அமைத்து உணவளித்து பாதுகாத்தால் சிட்டுக்குருவிகளின் கீச்….கீச்….குரல் இனிமையை அனைவரும் கேட்டு ரசிக்க முடியும். இந்தியா உட்பட ஒரு சில நாடுகள் சிட்டுக்குருவிகளை காக்கும் கடமையை மக்களுக்கு அறிவுறுத்த அஞ்சல்தலைகளையும் வெளியிட்டுள்ளன. டெல்லி மாநில அரசு அம்மாநிலத்தின் பறவையாக சிட்டுக்குருவியை தேர்வு செய்துள்ளது
காக்கை குருவி எங்கள் ஜாதி என்று பாடிச் சென்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் நம் இனத்தின் ஒரு பகுதியை முற்றிலும் அழிந்து விடும் படி விட்டுவிடாமல் நாம் ஒவ்வொருவரும் அதற்க்கான முயற்சியை எடுக்க வேண்டும்” என்றார்
செய்தி: திருச்சி விஜய்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









