தமிழகம் முழுவதும் ஒத்திசைவு முறையில் பறவைகள் கணக்கெடுப்பு பணி 07 மற்றும் 08/02/19 தேதிகளில் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் சக்கரக்கோட்டை, தேர்ங்கல், சித்திரங்குடி, காரங்காடு, காஞ்சிரங்குளம், ராமேஸ்வரம் அரிச்சல் முனை, வேம்பார், மண்டபம், கீழக்கரை, தூத்துக்குடி பகுதிகளில் உள்ள தீவுகளில் 3 குழுக்களாக சென்று கணக்கெடுப்பு பணி நடந்தது. பெரும்பாலான இடங்களில் பறவை எண்ணிக்தை குறைவாக இருந்ததால் காண் உயிர் ஆர்வலர்கள் கவலை அடைந்தனர்.
பருவமழை பொய்த்ததால் மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள் தண்ணீரின்றி வறண்டன. 2018 நவ., 16 இல் தென் மாவட்டங்களில் தாண்டவமாடிய கஜா புயல் காரணமாக இருக்கலாம் என காண் உயிர் ஆர்வலர்கள் கூறினர். பம்பாய் இயற்கை வரலாற்று சங்க துணை இயக்குநர் பாலசந்தர் கூறுகையில், போதிய நீர் இல்லாததால், பறவைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கஜா புயல் எதிரொலியால் பறவைகளின் வருகை பாதித்திருக்கலாம்என்றார். நடப்பாண்டு மஞ்சள் மூக்கு நாரை, கரண்டி மூக்கன், பூ நாரை, வாத்து வகைகள் அதிகம் தென்பட்டது என்றார். தேர்த்தங்கல் பள்ளி மாணவர்களுக்கு வனப்பாதுகாப்பு அலுவலர்கள் நுண்னோக்கி மூலம் சரணாலயத்தில் முகாமிட்ட பறவைகளை கண்டு மிகவும் மகிழ்ந்தனர்.
இரண்டாவது நாளான (08/02/19) மண்டபம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு பணி நடந்தது. இதில் சாம்பல் உள்ளான், மணல் உள்ளான், செங்கால் உள்ளான், பச்சைக் கால் உள்ளான் வகைகள், மீசை ஆலா, சின்ன குடுமி ஆலா, பெரிய குடுமி ஆலா, காஸ்டியன் ஆலா வகைகள், சாம்பல் நாரை, பழுப்பு நாரை, சின்ன கொக்கு, பெருங்கொக்கு, உண்ணி கொக்கு, பழுப்பு தலை கடல்புறா, கருப்பு தலை கடல் புறா, பெருங்கடல் புறா, ஹியூக்ளின் வகை புறா, கோட்டான் காணப்பட்டன.
தீவு பகுதிகள் நண்டு தின்னி உள்ளான், செந்நிற உள்ளான், கழுத்து பட்டை உள்ளான் ஆகிய அரிய வகை பறவை இனங்கள் கணக்கிடப்பட்டன. மண்டபம் தீவு பகுதி, தனுஷ்கோடி, அரிச்சல் முனை கோதண்டராமர் பகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் கணக்கிடப்பட்டன. தீவு பகுதிகளில் சில வாத்துகள் காணப்பட்டன. மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பறவைகள் இருக்கலாம் என கூறப்படுகிறது.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print













