இராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவர் தரணி முருகேசன் கட்சி விரோத செயல்பாடுகளில் ஈடுபடும் அவரது தன்னிச்சையான முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரம் அரண்மனை திடலில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட பொதுச் செயலாளர் ஆத்ம கார்த்தி, மாவட்ட துணைத்தலைவர் முத்துச்சாமி, மாநில மீனவரணி செயலாளர் நம்புராஜன், வழக்கறிஞர் சண்முகநாதன் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். மாநில தலைமை ஒருங்கிணைப்பு குழு முடிவிற்கு எதிராக கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடும் மாவட்டத் தலைவர் தரணி முருகேசன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். மாவட்ட தலைவராக தரணி முருகேசன் மீண்டும் தேர்வு செய்யப்பட தற்போது அவர் நியமித்துள்ள ஒன்றிய, ஊராட்சி கிளை நிர்வாகிகளின் பொறுப்புகளை களைந்து முறைப்படி மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
You must be logged in to post a comment.