ஒட்டன்சத்திரம் பகுதியில் வீட்டின் அருகே நிறுத்திய வாகனம் திருட்டு… வட மாநிலத்தவர் கைவரிசை.. சிசிடிவி காட்சிகள்..

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் பணிபுரியும் கார்த்திக்சுதன்(37) என்பவர் ஒட்டன்சத்திரத்தில் அருணா தியேட்டர் அருகே தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.21-12-2018 வெள்ளிக்கிழமை அன்று இரவு அவர் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தியுள்ளார். காலை எழுந்து பார்க்கும் போது இரு சக்கர வாகனம் திருடு போனது தெரியவந்தது.

இந்நிலையில் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் அளித்ததன் பேரில் அவரின் வீடு அருகே உள்ள கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை பார்க்கும்பொழுது அந்த வாகனத்தை இரு வடமாநில இளைஞர்கள் உடைத்து திருடும் வீடியோ காட்சி பதிவாகி இருந்தது அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து அந்த இரு வடமாநில இளைஞர்கள் ஒட்டன்சத்திரம் போலீசார் தேடி வருகின்றனர்.

செய்தி:- பக்ருதீன்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!