சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகத்சிங் மணி மண்டபத்தில், கே.எம்.எஸ் சிந்தனைச் சோலை சார்பில் பாரதியார் நினைவு நாள் விழா மற்றும் வ.உ.சி பிறந்த நாள் விழா நடைபெற்றது.
பேராசிரியர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். நிறுவனர் கே.எம்.எஸ் தெய்வசிகாமணி வரவேற்றார்.
கவிஞர் மான கிரி கனவு தாசன் தலைமையில் “வையத்தைப் பாலிக்கும் பாரதியார் குரல்கள்” என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது.
மருத்துவர் கனியன் பூங்குன்றன் “நெஞ்சு பொறுக்குதில்லையே”,
மருத்துவர் செந்தில்குமார் “வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”,
சேவுகன் அண்ணாமலை கல்லூரி மாணவி ஜாய் ஸ்ரீ பாரினில் “பெண்கள் நடத்த வந்தோம்”,
அதே கல்லூரி மாணவி ஆர்த்தி “சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே” என்ற தலைப்பில் கவிதை பாடினர்.
வழக்கறிஞர் மணி பாரதி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.