இராமநாதபுரம், செப்.16- இராமநாதபுரம் முஹமது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சதக் அறக்கட்டளையின் 50வது ஆண்டு விழாவை முன்னிட்டு நல்லாசிரியர் விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு அராபிக் துறைத்தலைவர் எம்.ரெய்ஹானத்தில் அதவியா அவர்கள் இறைவணக்கம் செலுத்தினார். கல்லூரி மாணவியர் சேர்க்கைக் குழு உறுப்பினர் ஆர்.தர்ஷினி பிரியங்கா வரவேற்றார். முஹமது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் எம்.மீரா வாழ்த்துரை வழங்கினார். ஆசிரியர் பணியின் முக்கியத்துவம் குறித்து
மதுரை காமராஜர் பல்கலை பதிவாளர் முனைவர் எம்.ராமகிருஷ்ணன், பேசினார். இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 50 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை பதிவாளர் முனைவர் எம்.ராமகிருஷ்ணன், முதல்வர் முனைவர் எம்.மீரா ஆகியோர் வழங்கினர். கல்லூரி மாணவியர் யின் சேர்க்கைக் குழு உறுப்பினர்கள் ஒருங்கிணைத்தனர். மாணவியர் சேர்க்கை குழு உறுப்பினர் ஆர்.ஐஸ்வர்யா நன்றி கூறினார். .


You must be logged in to post a comment.