வறுமையில் வாடும் இரண்டரை லட்சம் ஏழை பீடித் தொழிலாளர்கள்:கண்ணீரை துடைக்க முன்வருமா தமிழக அரசு?

வறுமையில் வாடும் இரண்டரை லட்சம் ஏழை பீடித் தொழிலாளர்கள்: கண்ணீரை துடைக்க முன்வருமா தமிழக அரசு?

கொரானாவின் கோரப்பிடியில் சிக்கி உலகம் தவிக்கும் நிலையில்  தமிழக அரசின் ஊரடங்கு உத்தரவினால் இரண்டரை லட்சம் பீடி தொழிலாளர்கள் வறுமையினால் பட்டினியில் சிக்கி தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.

பீடி தொழிலை மட்டுமே நம்பி வாழ்க்கையை நகர்த்தும் லட்சம் குடும்பங்கள். வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் இன்றி தங்களை தமிழக அரசு கைவிட்டு விட்டதாக குமுறுகின்றனர் பீடி தொழிலாளர்கள்.

மாவட்ட நிர்வாகமும் தங்களை கண்டு கொள்ளவில்லை என வேதனைப்படுகின்றனர்,

கரொனா தொற்றால் தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 45 நாட்கள் கடந்த நிலையில் எவ்வித வாழ்வாதாரமுமின்றி பசி பட்டினியால் வாடும் அவல நிலைக்கு 2.1/2 லட்சம் தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்,

ஊரடங்கு தளர்த்தப்பட்டு பல்வேறு தொழிற்சாலைகள் 50% . தொழிலாளர்களுடன் இயங்க அரசு அனுமதி தந்த நிலையிலும்,பீடி கம்பெனிகள் இயங்க இது வரை எவ்வித அனுமதியும் தமிழக அரசாலும்,மாவட்ட நிர்வாகத்தாலும் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது.

2.1/2 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கேள்விகுறியான நிலையில் அரசு மது பான கடைகளை திறந்ததும் மதுபான கடைகள் முன்பு தடுப்பு வேலிகள் அமைத்து மது விற்பனையில் காட்டும் அக்கறையும் ஏழை பீடி தொழிலாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

பீடி சுற்றும் தொழில் என்பது அதில் ஈடுபடும் அத்தனை தொழிலாளர்களும் அவரவர் வீட்டில் இருந்தே செய்யும் ஒரு தொழிலாகும் இதில் கரொனா நோய் பரவல் மற்றும் நோய் தொற்றுக்கான எவ்வித வாய்ப்பும் 1% கூட கிடையாது என்ற நிலையில், தொழிலாளர்களுக்கு தேவையான பீடி இலை  பீடி தூள் போன்ற மூல பொருட்களை வழங்க அரசு வழிவகை செய்தாலே தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் 2.1/2 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வில் ஒளி ஏற்றப்பட்டு விடும்..

இணையங்களில் விண்ணப்பிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்படும் இ பாஸ் முறையில் ஆன்லைன் விண்ணப்ப படிவங்களில் பீடி கம்பெனி  குறித்த எவ்வித தகவல்களோ இடம் பெறவில்லை  இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொண்ட நிலையில் புகையிலை பொருட்களுக்கு அரசு இதுவரை அனுமதி தரவில்லை என்று தெரிவிக்கின்றனர்.

பீடி கம்பெனிகள் தரப்பில் கூறும்போது, ஊரடங்கு நிலையில் கள்ள சாராயம் கஞ்சா விற்பனைகள் போன்ற சமூக விரோத செயல்கள் அதிகரித்து வரும் நிலையில் பீடி சுற்றும் தொழில் என்பது சட்ட விரோத செயலோ அல்லது சட்ட விரோத விற்பனையோ அல்ல முறையாக நாங்கள் அனுமதி பாஸ் கேட்டு விண்ணப்பிக்கும் போது அனுமதித்தால் மட்டுமே எங்களாலும் மூல பொருட்களை தொழிலாளர்களுக்கு முறைப்படி விநியோகம் செய்ய முடியும் என்கின்றனர்.

மது விற்பனை செய்வதில் காட்டுவதில் உள்ள அக்கறையை சாமானியர்களின் வாழ்க்கையிலும் அரசு காட்ட வேண்டும் என்பதும் இந்த பிரச்சனையில் முதலமைச்சர் தலையிட்டு இந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் அனைத்து பீடி சுற்றும் தொழிலாளர்களின் விருப்பமாக உள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!