வத்தலகுண்டு பகுதியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட பலே திருடன் கைது, 8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்..
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர் இருசக்கர வாகனம் திருட்டு சம்பவம் நடைபெற்றது தொடர்பாக வத்தலகுண்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து எஸ்.பி.பிரதீப் உத்தரவின் பேரில், நிலக்கோட்டை டிஎஸ்பி செந்தில்குமார் மேற்பார்வையில் நிலக்கோட்டை குற்றத் தடுப்பு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் காவலர்கள் ஜெயச்சந்திரன், பாலமுருகன், முருகன், கார்த்திக் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து மேற்படி தொடர் இருசக்கர வாகனத்தில் ஈடுபட்ட தேனி மாவட்டத்தை சேர்ந்த மாடசாமி என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 8 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
You must be logged in to post a comment.