வத்தலக்குண்டில் பதவி பறிக்கப்பட்டதால் விரக்தி அடைந்த த.வெ.க நிர்வாகி தற்கொலை முயற்சி!! திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே எழில்நகரை சேர்ந்த அபினேஷ்(26) தமிழக வெற்றி கழகத்தில் வத்தலகுண்டு ஒன்றிய தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் வத்தலகுண்டு பேருந்து நிலையம் முன்பு புதிதாக அமைக்கப்பட்ட கொடிமேடை கல்வெட்டில் வத்தலகுண்டு ஒன்றியத்திற்கு புதிய நிர்வாகிகள் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது இதனால் அதிர்ச்சி அடைந்த அபினேஷ், உள்ளிட்ட த.வெ.க கட்சியினர் 30-க்கும் மேற்பட்டோர் கொடியேற்று விழா தினத்தன்று புதியவர்களுக்கு பதவி வழங்கிய மாவட்ட தலைவர் தேவாவை கண்டித்து போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் பதவி பறிக்கப்பட்டதாக எண்ணிய அபினேஷ் மன உளைச்சலில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை போட்டுக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக வத்தலகுண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
You must be logged in to post a comment.