வத்தல குண்டுவில் மதுரை ரவுடி  கழுத்தறுத்து கொலை.! பதுங்கி இருந்த,  கூட்டாளிகள் 5 பேர் கைது! சினிமா பாணியில் நடைப்பெற்ற பரபரப்பு சம்பவம்..

வத்தலகுண்டுவில் மதுரை ரவுடி  கழுத்தறுத்து கொலை. கொடைக்கானல் செல்லும் வழியில் பதுங்கி இருந்த,  கூட்டாளிகள் 5 பேர் சிக்கினர். கார், கத்தி,  மொபைல் போன்கள்  பறிமுதல்.. பரபரப்பு..
வத்தலகுண்டுவில் மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி சிவமணி கழுத்தறுத்து  கொலை செய்யப்பட்ட வழக்கில்,  கொடைக்கானல் செல்லும் வழியில் பதுங்கி இருந்த,  கூட்டாளிகள் 5 பேர் சனிக்கிழமை  சிக்கினர். அவர்களிடமிருந்து கார், கத்தி,  மொபைல் போன்கள்  பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்தவர் செல்வம் மகன் சிவமணி (27) சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது,  மதுரை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில்,  ஒரு கொலை வழக்கு, ஏழு கொலை முயற்சி வழக்குகள் உள்ளது.
மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடியான சிவமணி, தான் தலைவனாகவும்,  தனக்கு கீழ் சில ரவுடிகளை வைத்து மதுரையில் தாதாவாக செயல்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தனக்கு கீழ் உள்ள ரவுடிகளை இழிவாகவும் மரியாதை குறைவாகவும் நடத்தி, அவர்களை அடிமை போல் செயல்படுத்தி வந்துள்ளதாக  கூறப்படுகிறது.இதனால், ரவுடி சிவமணியை தீர்த்துக்கட்ட முடிவு செய்து, ரவுடி சிவமணியிடம் நைசாக பேசி கொடைக்கானல் சுற்றுலா செல்ல முடிவு செய்துள்ளனர். இதன்படி  இவரது கூட்டாளிகள் சிவமணி உட்பட  6 பேர், மதுரையில் இருந்து ஒரு ஸ்கார்பியோ காரில், வெள்ளிக்கிழமை மாலை  திண்டுக்கல் மாவட்டம்,  வத்தலகுண்டு வழியாக கொடைக்கானல் சுற்றுலா சென்றுள்ளனர்.
காரில் செல்லும்போது மது போதையில்  இருந்த அவர்கள்,   வத்தலகுண்டு மதுரை ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது, மது போதையில் இருந்த ரவுடி  சிவமணியை  காருக்குள் வைத்து,  கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து,  அவரது உடலை வத்தலகுண்டு எழில் நகரில் சாலையில் வீசி உள்ளனர்.
கொலை செய்யப்பட்ட பிறகும் ஆத்திரம் அடங்காமல் சிவமணி தலையில்  கல்லை தூக்கி போட்டு முகத்தை  சிதைத்து விட்டு  கொலையாளிகள் அங்கிருந்து  கார் டிரைவர் உட்பட ஐந்து பேர் தப்பி ஓடிவிட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற, வத்தலகுண்டு காவல் ஆய்வாளர்  கௌதம், சார்பு-ஆய்வாளர்    ஷேக் அப்துல்லா தலைமையிலான காவல்துறையினர் ரவுடி ஜெய்ஹிந்த்புரம்  சிவமணி உடலை கைப்பற்றி பிரரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வத்தலகுண்டு காவல்துறையினர், சிவமணியை கொலை செய்த, கூட்டாளிகள்  5 பேரை, தனிப்படை அமைத்து, அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து அவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், ரவுடி சிவமணி கூட்டாளிகள் கொடைக்கானல் செல்லும் வழியில் கெங்குவார்பட்டி அருகே பதுங்கி இருந்தபோது, தனிப்படை காவலர்களால்  சுற்றி வளைத்து,  மதுரை, வில்லாபுரம் ராஜேந்திரன் மகன் சூர்யா (25) ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த ராமு மகன் மணிகண்டன் (25) கோபால் மகன் அருண்பாண்டி (28) வீராசாமி மகன் முனியசாமி (30) மற்றும் இதே பகுதியை சேர்ந்த கார் டிரைவர் சரத்குமார் (35) ஆகியோரை  மடக்கிப் பிடித்தனர். இதில், சூர்யா,  மணிகண்டன், அருண்பாண்டி,  முனியசாமி நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி  சிறையில் அடைத்தனர்.  மேலும், இந்த வழக்கில் கார் டிரைவர் சரத்குமாரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மொபைல் போன்கள், கொலை செய்ய பயன்படுத்திய கத்தி, மற்றும் ஸ்கார்பியோ கார் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த கொலையானது, ரவுடி சிவமணி தனது கூட்டாளிகளை இழிவாகவும்,  கேவலமாகவும் நடத்தியதற்காக நடைபெற்ற கொலையா? அல்லது மதுரையைச் சேர்ந்த வேறு சில ரவுடிகள் சிவமணியே கொலை செய்ய, அவரது கூட்டாளிகளை பயன்படுத்தி  திட்டம் தீட்டி கொலை செய்யப்பட்டதா?  என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!