திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா வத்தலக்குண்டு பேரூராட்சி பேருந்து நிலையத்தின் நுழைவாயில் நம்மை வருக வருக என வரவேற்பது உண்மைதான். ஆனால் உள்ளே சென்று பார்த்தால்தான் உண்மை விளங்கும் காரணம் நுழைவாயிலின் முன்புறம் குண்டுங் குளியும், பள்ளம் நிறைந்தும், மிகவும் சேதமடைந்து காணப்படும் தார்சாலையும், பேருந்துகள் கவிழ்ந்து விபத்து ஏற்படும் அபாயம் ஒருபக்கம் இருக்க, மறுபுறம் சுற்றுப்புற சூழல் மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக்பைகளும், கப்புகளும், மருத்துவ கழிவுகளும் இன்னும் தீங்கு விளைவிக்கும் கிருமி நாசினிகளும் பேருந்து நிலையத்திற்குள் வரும் பயணிகளை முகம் சுழிக்க வைக்கிறது.
மேலும் குறுகிய பேருந்து நிலையம் என்பதாலும், தேவையற்ற வாகனங்களை பேருந்து நிலையத்திற்குள் அனுமதிப்பதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும் மக்களை காக்குமா இந்த காவல் துறையும், பேரூராட்சி நிர்வாகமும்..
செய்தி:- ப.அழகர்சாமி / ஜெ.அஸ்கர், திண்டுக்கல்
You must be logged in to post a comment.