திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கவுண்டம்பட்டி சார்ந்த முருகன். வயது 45. பாரதி நகர் சேர்ந்தவர் சமையன் என்ற சாய்ராம். வயது 60. கட்டக்கூத்தன்பட்டி அடுத்த பாஞ்சாலங்குறிச்சியை சேர்ந்த தங்கப்பாண்டி.47. இவர்கள் 3 பேரும். பள்ளபட்டி சாலையில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் மதுபானத்தை வாங்கி குடித்தனர் இதில் மயங்கி விழுந்த அவர்களே அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் முருகன். சமையன் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.
தங்கப்பாண்டி மதுரை மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுதொடர்பாக அமைய நாயக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சட்டவிரோதமாக மது விற்ற பள்ளபட்டியை சேர்ந்த ஜெயச்சந்திரன். அவருடைய மைத்துனர் ராஜா. செல்வம். மற்றொரு ராஜா ஆகியோரை கைது செய்தனர். மேலும் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் தொழில் போட்டி காரணமாக மது பாட்டில்களில் ரசாயனம் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மது பாட்டில்களில் ரசாயனத்தை கலந்ததாக கொடைரோடு டாஸ்மார்க் சூப்பர்வைசர் ராஜலிங்கம். அதே ஊரை சேர்ந்த தமிழ்வாணன்.பி. கிருஷ்ணமூர்த்தி. செந்தில். மற்றொரு கிருஷ்ணமூர்த்தி. மதுரையைச் சேர்ந்த நகை பட்டறை உரிமையாளர் பாலு ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் ராஜலிங்கத்தின் தாயார் காசம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் இறந்தார். இதையடுத்து அவருடைய இறுதி சடங்கு நேற்று நடைபெற்றது. தாயாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க பரோல் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் ராஜலிங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரணை செய்த ஐகோர்ட்டு. மூன்று நாள் பரோல் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து ராஜலிங்கம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன். தாயாரின் இறுதி சடங்கில் கலந்து கொண்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர், ராஜா


You must be logged in to post a comment.