நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வங்கியாளர்களுடனான ஆலோசனை கூட்டம் !

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வங்கியாளர்கள் உடன் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், நாடாளுமன்ற பொதுத்தேர்தல்- 2024க்காண தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்ததையொட்டி வங்கியாளர்கள் பண பரிவர்த்தனைகள் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணைய வழிகாட்டுதலை பின்பற்றி செயல்பட வேண்டும்.ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கும் அதே போல் ஏடிஎம் இயந்திரங்களுக்கு பணம் எடுத்துச் செல்லும் போது உரிய ஆவணங்களுடன் அனுமதிக்கப்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் அடையாள அட்டையுடன் பணிமேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும். மேலும் ஒவ்வொரு நாளும் வங்கிகளில் வாடிக்கையாளர்கள் பண பரிவர்த்தனையின் போது சந்தேகத்திற்குரிய கண்டறிந்தால் உடனடியாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.அதேபோல் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பங்கேற்கவுள்ள வேட்பாளர்களுக்கான தேர்தல் வங்கி கணக்கு துவங்கும் போது அவர்களிடம் தேர்தல் நடத்தை விதிகளை கடைபிடித்து செயல்பட வங்கியாளர்கள் அறிவுறுத்த வேண்டும். தேர்தல் முடிவுறும் வரை வங்கிகளில் தேர்தல் ஆணைய வழிமுறைகளை பின்பற்றி சிறப்பாக செயல் பெற்றிட வேண்டுமென மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு, கூடுதல் ஆட்சியர் ஊரக வளர்ச்சி முகமை வீர் பிரதாப் சிங், பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கெளர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) இளங்கோவன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!