இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே மலட்டாறு விலக்கு ரோட்டில், உள்ள வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் அடுக்குவதற்காக பணம் கொண்டு சென்ற வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது.
அப்போது வாகனத்தில் இருந்த ரூ. 1கோடியே,60 லட்சம் மாயமானது என வாகனத்தில் வந்த பணியாளர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். இத இதனடிப்படையில் சாயல்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். அளித்த அர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். வாகனம் கவிழ்ந்த போது பணம் மாயம் என பணியாளர்கள் கூறுவது உண்மையா என்ற சந்தேக கோணத்தில் விசாரணை முடுக் கி விடப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா முதற்கட்ட விசாரணை மேற்கொண்டார். வாகனத்தில் வந்த பணியாளர்கள் அன்பு, குருபாண்டி , கபிலன், வீரபாண்டி ஆகியோரிடம் விசாரணை தொடர்கிறது .
செய்தி:- முருகன், இராமநாதபுரம்.





You must be logged in to post a comment.