மஹாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, சனி ஞாயிறு அரசு விடுமுறை தினங்களையொட்டி ‘வங்கி தொடர் விடுமுறைகள்’ இன்று முதல் துவங்கி இருக்கிறது. இந்நிலையில் இன்று (29.03.2018) கீழக்கரை பகுதியில் உள்ள வங்கி வாடிக்கையாளர்கள் பலருக்கு தொலைபேசி வாயிலாக பேசும் மர்ம ஆசாமிகள் தாங்கள் வங்கியில் இருந்து பேசுவதாகவும், தங்கள் வங்கி கணக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களை ரெனீவல் செய்ய வேண்டி இருப்பதாகவும் கூறி வங்கி ATM இரகசிய தகவல்களை கேட்டறிந்து வருகின்றனர்.
அவ்வாறு பெறப்படும் தகவல்களை கொண்டு மர்ம ஆசாமிகள், ONLINE, ATM மூலம் வங்கி கணக்கில் உள்ள பணங்களை ஆன்லைன் மூலம் திருடுவது தொடர் கதையாகி வருகிறது. கீழக்கரை நடுத்தெரு பகுதியை சேர்ந்த ஒரு வயது முதிர்ந்த பெண்மணிக்கு, இன்று காலை தொலைபேசி வாயிலாக தான் வங்கி அதிகாரி என்று தொடர்பு கொண்டு பேசிய ஆசாமி அனைத்து வங்கி ATM தகவல்கள் அனைத்தையும் கேட்டுப் பெற்றுள்ளான். அதன் பிறகு சுதாரித்து கொண்ட அந்த மூதாட்டி தங்கள் குடும்பத்தாரிடம் உடனடியாக கூறியதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வங்கி கார்டு முறையாக நிறுத்தி வைக்கப்பட்டதுடன் இறைவன் அருளால் பெரும் மோசடி தவிர்க்கப்பட்டது.

ஆகவே விழிப்புணர்வுடன் செயல்படுங்கள். பொதுமக்கள் எவரிடத்திலும் தொலைபேசி வாயிலாக எவ்வித வங்கி ATM சம்பந்தமான இரகசிய தகவல்களையும் தெரிவிக்க வேண்டாம் என கீழை நியூஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










அருமையான பதிவு.தங்கள் விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி.