9083397612 ஜாக்கிரதை.. தொடரும் மோசடி..

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கீழக்கரையில் பல விதமான மொபைல் எண்களில் இருந்து வங்கிகளில் இருந்து பேசுவதாக கூறி வங்கி கணக்கு எண் ரகசிய குறியீடு போன்றவற்றை பெற்று பல லட்சம் ரூபாய் பல நபர்களிடம் மோசடி செய்யப்பட்டது. சில மாதங்களாக அமைதியாக இருந்த திருடர்கள் மீண்டும் கைவரிசையைக் காட்டத் தொடங்கியுள்ளார்கள்.

 இன்று தெற்குத் தெரு மற்றும் வடக்குத் தெரு பகுதிகளில் உள்ள பெண்களுக்கு 9083397612 என்ற எண்ணில் இருந்து தொடர்பு கொண்டு வங்கி விபரங்களை கேட்டுள்ளார்கள்.  ஆனால் ஏற்கனவே இது சம்பந்தமாக கேள்விபட்டிருந்த அப்பெண்கள் சுதாரித்துக் கொண்டு அலைபேசியை துண்டித்துவிட்டார்கள். இந்த எண்ணுக்கு நாம் தொடர்பு கொண்ட பொழு சென்னை பாரத வங்கியின் வாடிக்கையாளர் மையம் என்று இந்தியில் முரணாக பேசுகிறார்கள். மேல் விபரம் கேட்ட பொழுது உங்கள் எண்ணுக்கு குறுஞ்செய்தி வரும் என கூறி துண்டித்துவிட்டார்கள்.  ரமலான் மாதத்தில் நம் ஊர் போன்ற பகுதிகளில் பணப் பரிமாற்றம் அதிகமாக இருக்கும் என்பதை அறிந்து கொண்டு கைவரிசையை காட்டத் தொடங்கியுள்ளார்கள்.

 இது சம்பந்தமாக வங்கி அதிகாரிகளும் பொதுமக்களுக்கு தொலைபேசி மூலம் எந்த விபரங்களும் யாரிடமும் கொடுக்க வேண்டாம்; என்று அறிவிப்பும் செய்து இருந்தது குறிப்பிடதக்கது.

பொதுமக்களே கவனம்..

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!