மயிலாடுதுறை மாவட்டத்தில் கீழையூர், கிடாரம்கொண்டான், செம்பனார்கோவில் , ராதாநல்லூர், அள்ளிவிளாகம், புஞ்சை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 1000 ஏக்கரில் பூவன், ரஸ்தாளி, மொந்தன், கற்புறவல்லி உள்ளிட்ட பலவகையான வாழை வாழைகள் பயிரிடப்பட்டுள்ளன. வாழை விவசாயத்துக்கு ஊராம் இல்லாமல் பஞ்சகாவியம் மாட்டுச்சாணம் எள்ளுப் புண்ணாக்கு இயற்கை முறையில் வாழை விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் விளைவிக்கப்பட்டு சென்னை, கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு வாழை இலை வாழைப்பழம் தினந்தோறும் கொள்முதல் செய்வது வழக்கம் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 45 நாட்களாக வியாபாரிகள் வாங்க முன்வராததால் வாழைத்தார்கள் தேங்கி உள்ளன ஒரு வாழைத்தார் 200 முதல் 500 வரை விற்பனையாகிய நிலையில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஒரு வாழைத்தார் 30 முதல் 70 வரை விற்கப்படுகின்றது.
இதனால் வாழை விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது பொதுவாக அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் வாழைஇலை வாழைப்பழம் வாழைமரம் பயன்படுத்துவார்கள் இப்போது திருமண நிகழ்ச்சிக்கு கூட நடைபெறாததால் வாழைத்தார் மற்றும் இலை தேங்கி கிடைக்கின்றன. மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக வாழை விவசாயம் அதிகப்படியாக விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் வாழை விவசாயம் செய்ய ஒரு ஏக்கருக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவாகும் நிலையில் முதலீடு செய்த பணத்தை கூட திரும்ப எடுக்க முடியாத சூழ்நிலையில் உருவாகியுள்ளது. மத்திய மாநில அரசுகள் வாழை விவசாயத்தில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை கணக்கீடு செய்து உரிய நிவாரணம் தறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் வாழை விவசாயத்திற்கு நலவாரியம் அமைக்கப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனாவும் ஊரடங்கு உத்தரவால் பெரிதும் பாதிப்பு உள்ளன வாழை விவசாயத்திற்கு அரசு நேரடியாக பார்வையிட்டு உரிய நிவாரண வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





You must be logged in to post a comment.