பாம்பன் மீனவர்கள் 18 பேர் விடுதலை! மன்னார் நீதிமன்றம் உத்தரவு!!

ராமநாதபுரம்  மாவட்டம் பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த  16 ந்தேதி மீன்பிடிக்க சென்று மன்னார் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டிருந்த 18 மீனவர்களின்  வழக்கு இன்று மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீது மன்னார்  மீன்வளத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததால்  மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்து மன்னார  நீதிமன்ற நீதிபதி தீர்பளித்தார். இதனையடுத்து பாம்பன்   மீனவர்கள் 18 பேரும் யாழ்பாணத்தில் உள்ள இந்திய துனை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 18 பேரும் ஓரிரு நாட்களில் விமானம் மூலம் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்கப்படுகிறது. மேலும் மீனவர்கள் பயன்படுத்திய இரண்டு மீன் பிடி விசைப்படகுக்கான வழக்கு வரும் மார்ச் 20 ந்தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!