இறை உதவியுடன் சோதனைகளை சாதனைகளாக மாற்றுவோம்! பக்ரீத் தின வாழ்த்துச் செய்தி!

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருவாடனை சட்டமன்ற தொகுதி இணைச்செயலாளர் N.முகமது ரிஸ்வான் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது;தியாகத்தை நினைவுகூறும் விதமாக உலகில் கோடிக்கணக்கான மக்களால் கடைபிடிக்கப்படும் ‘ஈதுல் அழ்ஹா’ எனும் தியாகத் திருநாளை உவகையுடனும், குதூகலத்துடனும் கொண்டாடும் அனைவருக்கும் இதயங்கனிந்த வாழ்த்துக்களை எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.

இறைத்தூதர் இப்ராஹிம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக கொண்டாடப்படும் இந்நாள் பகிர்ந்துண்ணும் பழக்கத்தை நம்மிடம் போதிக்கிறது. இந்நாள் போதிக்கும் படிப்பினை மூலம், கொரோனா பேரிடரில் சிக்கி வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் அண்டை வீட்டார்க்கும், ஏழை-எளிய மக்களுக்கும் நாம் உதவிக்கரம் நீட்டுவோம். மேலும், சோதனைகளை சாதனைகளாக மாற்ற முடியும் என்பதையும் உணர்த்துகின்ற இந்நாள் மூலம், இறை உதவியுடன், இந்நாட்டை பிரிக்க நினைக்கும் சர்வாதிகாரத்திடமிருந்தும் நாட்டையும், நாட்டு மக்களையும் காக்க நாம் சபதமேற்போம்.

உலகம் போற்றும் இந்நன்னாளில் மக்களிடையே அன்பும் சமாதானமும் தழைத்திடவும், ஜனநாயகம் ஓங்கிடவும், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வு உயர்ந்திடவும், சமூக நல்லிணக்கத்தையும், மத ஒற்றுமையையும் காத்திடவும், அநீதியை தகர்த்து நீதியை வென்றிடவும் தியாகங்கள் பல செய்திடவும் நாம் சபதமேற்போம். இன்றுபோல் என்றும் மகிழ்வுடன் வாழவும், குறைகள் நீங்கி நிறைவாழ்வு பெற்றிடவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!