மதுரை மாவட்ட பேட்மிட்டன் அசோசியேசன் சார்பில், மாநில அளவிலான போட்டிகள்…

மதுரை ரேஸ்கோர்ஸ் விளையாட்டு மைதானத்தில் மதுரை மாவட்ட இறகு பந்து கழகம் சார்பில் மாநில அளவிலான போட்டிகள் வரும் 7,8,9,10ஆகிய நான்கு நாட்கள் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் தமிழகத்திலிருந்து 700க்கும் மேற்பட்ட 10வயது முதல்19 வயது வரை உள்ள ஆண்கள்,பெண்கள் இருபாலர்கள் கலந்து கொள்கின்றனர். இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு  ரூபாய் 2லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படுகிறது. மேலும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு பரிசுகளும், கோப்பைகளும், விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்படுகிறது. இதன் முதற்கட்ட போட்டிகளை மதுரை மாவட்ட தலைவர் கோபால் துவக்கி வைத்தார்.
உடன் செயலாளா் ராமகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர், மதன், பொருளாளர், டாக்டர்.கார்த்திகேயன், துணைச்செயலாளர் எட்வின் உட்பட இறகு பந்து கழக நிர்வாகிகள்  பலர் கலந்து கொண்டனர்.
கீழை நியூஸுக்காக மதுரை நிருபர் கனகராஜ்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!