முதுகுளத்தூரில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு..

இராமநாதபுரம், அக்.17- இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் மூலம் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கர்ப்பிணிகள் 100 பேருக்கு சமூதாய வளைகாப்பு நிகழ்ச்சியை  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்  நடத்தி வைத்தார். அமைச்சர் தெரிவித்ததாவது: பெண்களின் முன்னேற்றத்திற்காக பல எண்ணற்ற l திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர்  அறிவித்து பிற மாநிலங்களே தமிழகத்தை உற்று நோக்கும் அளவிற்கு செயல்பட்டு வருகிறார். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பெண்களின் வாழ்வு மேம்படும் வகையில் அறிவித்த திட்டங்கள் பல உண்டு. அதையும் தாண்டி இலவச பேருந்து பயணத்திட்டம், பெண்களுக்கு உயர் கல்வி உதவித்தொகை மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மாதம் ரூ1000 உள்பட எண்ணற்ற திட்டங்களை முதலமைச்சர் அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இவ்வாறு அமைச்சர் பேசினார். பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் வேலுச்சாமி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் விசுவாபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!