நாகை மாவட்டத்தை சேர்ந்த 10 ஆழ்கடல் விசைப்படகுகள் கேரள மாநிலம் கொச்சினில் உள்ளது. இந்த படகுகளில் நாகபட்டினத்தை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட மீனவர்கள் மார்ச் 13ம் தேதி ஆழ்கடல்
பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர். ஆனால், அவர்கள் நடுக்கடலில் மீன்பிடியில் இருந்ததால் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான தகவல் தெரியவில்லை. இந்நிலையில் அவர்கள் மார்ச் 27 ல் வழக்கம் போல் கொச்சின் துறைமுகத்திற்கு வந்தனர். கேரள அரசு அவர்களை கரை இறங்க அனுமதிக்காததால் நாகபட்டினம், மூக்கையூர் துறைமுகத்திற்கு வந்தனர். கொரோனா அச்சத்தால் அங்கும் இறங்க அனுமதிக்காத அதிகாரிகள் பாம்பன் கடல் பகுதிக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து மார்ச் 31 பாம்பன் துறைமுகத்திற்கு வந்த 60க்கும் மேற்பட்ட மீனவர்கள் பாம்பன் துறைமுகத்தில் இறங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்., இந்நிலையில் பாம்பன் தூக்கு பாலம் திறக்கப்பட்டதையடுத்து 10 படகுகளில் இருந்த 60க்கும் மேற்பட்ட மீனவர்கள் தூக்கு பாலத்தை கடந்து நாகபட்டினம் சென்றனர். தூத்துக்குடியில் இருந்து நாகபட்டினம் பகுதிக்கு தொழிலுக்குச் சென்ற மீனவர்களும் தூக்கு பாலத்தை கடந்து சொந்த ஊர் சென்றனர்.


You must be logged in to post a comment.