வத்தலக்குண்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை இருபாலர் கலைக்கல்லூரியாக மாற்ற வேண்டும் என்று வத்தலக்குண்டு முக்கிய பிரமுகா்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஊரின் மத்தியில் அமைந்துள்ளது. வத்தலக்குண்டுவில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி இல்லாததால் வெளியூர்களில் சென்று படித்து வருகின்றனர். அதே போல பெண்கள் நிலக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் சென்று படித்து வருகின்றனர். ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட 30க்கும் மேற்பட்ட வகுப்புகள் கொண்ட ஆங்கில எழுத்து எச் வடிவிலான கட்டிடமும்,புதிதாக கட்டப்பட்ட 30 வகுப்புகள் கொண்ட மூன்று மாடி கட்டிடமும் பள்ளிவளாகத்தில் இருக்கிறது. மேலும் பெரிய அளவிலான மைதானங்கள் காலியிடங்கள் அதிகளவில் உள்ளன. பள்ளி வளாகத்தில் உள்ள 30 வகுப்புகள் கொண்ட புதியகட்டிடம் பள்ளி நடத்த போதுமானது. அவ்வாறு பள்ளி அங்கு செல்லும் போது ஆங்கிலேய காலத்து எச் வடிவ கட்டிடம் காலியாகிவிடும். அந்த கட்டிடத்தில் இருபாலர்களும் படிக்கும் புதிய அரசு கல்லூரி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிலவிவருகிறது. இந்நிலையில் வத்தலக்குண்டு முக்கிய பிரமுகர்கள் ஒன்று கூடி வத்தலக்குண்டுவில் இருபாலர் அரசு கல்லூரி பள்ளி வளாகத்திலேயே அமைக்க குழு அமைத்தனர். அந்த குழு கூட்டம் தலைவர் வக்கீல் ராஜா தலைமையில் நடந்தது.
கூட்டத்திற்கு அவைத் தலைவர் கென்னடி, செயலாளர் கோபால், துணை தலைவர்கள் பால்ராஜ், சூரியமூர்த்தி, பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கல்லூரி அமைக்கும் கோரிக்கையை அரசுக்கும், மாவட்டஅமைச்சருக்கும் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிகாரிகளுக்கும் அனுப்புவது என்று தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் வத்தலக்குண்டு பிரமுகர்கள் மருதராஜன், மணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனா. முடிவில் வாசுதேவன் நன்றி கூறினார்.


You must be logged in to post a comment.