தென்காசி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. அரவிந்த் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் காவல் துறையினரால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று மாணவ மாணவரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பேருந்து நிலையங்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்குதல், மேலும் விழிப்புணர்வு பேரணி நடத்துதல் போன்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.




இந்நிலையில், பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கொண்டலூர் அரசு துவக்கப் பள்ளியில் பயிலும் மாணவச் செல்வங்களை காவல் நிலையம் அழைத்து வந்து காவல் துறையின் பணிகள் குறித்து எடுத்துரைத்து, மாணவர்கள் யாரும் தீய வழியில் சென்று விட கூடாது என அறிவுறுத்தப்பட்டது.
மேலும் சாலை விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும், போதை பொருள்களுக்கு யாரும் அடிமையாகி விடக்கூடாது, அவசர காலங்களில் 100,101,108,181,1098 போன்ற உதவி எண்களை தயங்காமல் எவ்வாறு அழைக்க வேண்டும் போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இவ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் மாணவ மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் பேனாக்கள் வழங்கப்பட்டது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.