தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் மலேரியா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஹரிகெங்காராம் தலைமை வகித்தார். முனைவர் மு. சிவக்குமார் முன்னிலை வகித்தார். மாணவி கலைச் செல்வி வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக மருத்துவர் ராஜேஸ்வரி, குருக்கள்பட்டி மருத்துவ அலுவலர் விஷ்ணு, சேர்ந்தமரம் மருத்துவ அலுவலர் முகமது ஜாஃபர் அலி ஆகியோர் பங்கேற்று மலேரியா தடுக்கும் முறைகளை விளக்கி கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட மலேரியா அலுவலர், ராமலிங்கம் இளநிலை பூச்சியியல் வல்லுநர் மணிகண்டன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செயின்ஸ் குமார், சேர்ந்தமரம் சுகாதார ஆய்வாளர் சுப்பையா, குருக்கள்பட்டி விக்னேஷ் குமார், சேர்ந்தமரம் மருத்துவம் சாரா மேற்பார்வையாளர், முருகன், ஆகியோர் கலந்து கொண்டார்கள். இதில், மலேரியா எவ்வாறு உருவாகிறது, அது மற்றவர்களுக்கு எவ்வாறு பரவுகிறது என்பதையும், மலேரியா தாக்கிய மனிதர்களுக்கு எவ்வாறு உடலில் மாற்றங்கள் நடைபெறும், மலேரியாவால் பாதித்தவர்களுக்கு என்னென்ன அறிகுறிகள் உடம்பில் தோன்றும், மலேரியா பாதித்த மனிதர்களுக்கு என்னென்ன உணவு வகைகள் கொடுக்க வேண்டும். அதிலிருந்து விடுபட என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என வரைபடங்கள் கொண்டு எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியினை மாணவி பூஜா தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை நாட்டு நலப்பணித் திட்ட அணி எண் 8,9 &10 அலுவலர்கள், முனைவர் காதர் முகைதீன், முனைவர் ஆஷாராஜா மற்றும் முனைவர் ஷீபா பார்லின் சிறப்பாக செய்திருந்தினர். இறுதியாக அனைவரும் சுகாதார உறுதிமொழி ஏற்று கொண்டார்கள். இறுதியில் மாணவி ஆஷா நன்றி கூறினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.