மதுரை காமராஜர் சாலையில் உள்ள நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
பள்ளி தாளாளர் சகோதரி ஞானசௌந்தரி தலைமையில் முதல்வர் ஜோஸ்லின் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் காவல் ஆய்வாளர் தங்கமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும் நிகழ்வில் பேசிய ஆய்வாளர் தங்கமணி, பெண்கள் நம் நாட்டின் கண்கள்,முதலில் நம் மனத வேண்டியது தாய் தந்தையர் அவர்கள் தான் நம் வாழ்வில் முக்கியம்,கல்வி என்பது மிக முக்கியமானது ஒன்று வாழ்க்கையில் கல்வி தான் உயர்த்தும் எனவே மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், போக்குவரத்து விதிகளை கடைபிடிக்கவேண்டும் என்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்தும் வாழ்க்கைக்கான தத்துவங்கள் குறித்தும் கலந்துரையாடினார். மேலும் மாணவிகளுடன் உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.
தொடர்ந்து 900 குறள்களை நினைவு கூர்ந்து கேட்டவுடனே சொல்லக்கூடிய ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியை பாராட்டி கௌரவித்தார்.
You must be logged in to post a comment.