தஞ்சாவூர் மாவட்டம் ,பூதலூர் ஒன்றியம், சோலகம்பட்டி பஞ்சாயத்தில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் இன் சார்பாக புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது .
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிறப்புரை ஆற்ற வந்த சங்கீதா (பெண்கள் சுகாதார தன்னார்வலர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சோலகம் பட்டி)பெண்களுக்கான புற்றுநோயின் அறிகுறிகள் என்ன? மார்பக புற்றுநோய் என்றால் என்ன? கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்றால் என்ன? என்பதை பற்றி தெளிவாக கலந்து கொண்ட மக்களிடத்தில் உரையாற்றினார் .
குறிப்பிட்ட அறிகுறிகள் ஏதேனும் உங்களுக்கு இருக்கும் என்றால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுக வேண்டும் என்று கூறினார்.
புற்று நோயை ஆரம்பத்திலே கண்டறிந்தால் அவற்றினை முழுவதுமாக நாம் குணப்படுத்த முடியும் என்று கூறினார் .
35க்கும் மேற்பட்டோர் விழிப்புணர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெற்றனர் புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்டின் சார்பாக மாவட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அந்தோணிராஜ் ஏற்பாடு செய்திருந்தார்.
You must be logged in to post a comment.