உசிலம்பட்டியில் போதைப்பொருளின் தீமை குறித்து தத்ரூபமாக நாடகம் மூலம் நடித்துக்காட்டிய பள்ளிக்குழந்தைகள்.

தமிழகத்தில் போதைப்பொருட்களின் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைதத் தொடர்ந்து போதைப் பொருட்களின் ஒழிப்பது குறித்து அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பள்ளி மாணவ மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அவர்கள் மூலம் பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள நாடார் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில் பள்ளி மாணவ மாணவர்களின் போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.முன்னதாக போதைப் பொருட்களினால் உண்டாகும் தீமை குறித்து பள்ளிக்குழந்தைகள் பங்கேற்ற விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.போதையினால் ஏற்படும் தீமைகள் குடும்பத்தில் உண்டாகும் பிரச்சனைகள் குறித்து பள்ளிக்குழந்தைகள் தத்ரூபமாக நடித்துக் காட்டியது காண்போரின் நெஞ்சில் பரவசத்தை ஏற்படுத்தியது.பின்பு உசிலம்பட்டி முக்கிய வீதிகளின் வழியாக பள்ளி குழந்தைகளின் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இந்நிகழ்ச்சி ஏற்பாட்டை பள்ளி தலைமை ஆசிரியர் மதன்பிரபு செய்திருந்தார்.

 

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!