சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி; கலெக்டர் கமல் கிஷோர் துவக்கி வைத்தார்..

தென்காசி புதிய பேருந்து நிலைய பகுதியில் இன்று (12.01.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை சார்பில் சாலை பாதுகாப்பு மாத விழாவினை முன்னிட்டு நடைபெற்ற சாலை பாதுகாப்பு – உயிர் பாதுகாப்பு தொடர்பான இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவிக்கையில், தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு போக்கு வரத்துத் துறை சார்பில் சாலை பாதுகாப்பு மாத விழாவினை (01.012026 முதல் 31.01.2026 வரை) முன்னிட்டு சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு தொடர்பாக இருசக்கர வாகனத்தின் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது.

இப்பேரணி புதிய பேருந்து நிலையத்திலிருந்து துவங்கி சக்திநகர், குத்துக்கல் வலசை வழியாக வட்டார போக்குவரத்து அலுவலகம் வரை சென்றடைந்தது. இப்பேரணியில், தலைக்கவசம் உயிர்க்கவசம், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர் போன்ற வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. பொது மக்கள் போக்குவரத்துத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் சாலை விதிகளை பின்பற்றி உயிரை காத்திடும் வகையில் பாதுகாப்பான பயணத்தினை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்தார். இந்நிகழ்வில், வட்டார போக்குவரத்து அலுலவர்கள் சரவண பவன் (தென்காசி), செல்வி (சங்கரன்கோவில்), ஆய்வாளர்கள் ராஜசேகரன், ராஜன், கனகவல்லி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Abubakker Sithik

[email protected]

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!