சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் மதுரை- ஆனையூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து நடத்திய பச்சிளம் குழந்தைகளின் உடல்நலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆனையூரில் உள்ள சுகாதார மையத்தில் நடத்தப்பட்டது இதில் நிகழ்ச்சியின் ஆரம்பமாக மதுரை சில்ட்ரன் டிரஸ்ட் இன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக சாத்தி தொண்டு நிறுவனத்தின் மதுரை மாவட்ட திட்ட அலுவலர் ரமேஷ் தலைமை ஏற்று சிறப்புரையாற்றினார் நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக கர்ப்பிணி பெண்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் குழந்தைகளுக்கு போடப்பட வேண்டிய தடுப்பூசிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது செவிலியர் சொல்லும் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தடுப்பூசி அட்டவணை அட்டைகளை தவறாமல் எடுத்து வர வேண்டும் என்றும் அதனை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் சத்தான உணவுப் பொருட்களை சாப்பிட வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியாக நகர்ப்புற ஆரம்ப சுகாதார செவிலியர் சித்ரா நன்றியுரை வழங்கினார்.



You must be logged in to post a comment.