பாரதரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வாக்காளர் விழிப்புணர்வு பேரணி..

பாரதரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வெள்ளிக்கிழமையன்று காலை 11.00 மணியளவில்ää கல்லூரி வளாகத்தில் 1200 மாணவää மாணவியர்கள் கலந்து கொண்டுää வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. ​தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. பொருளாதாரத் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் இரா. குமார் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.​

கல்லூரி முதல்வர் முனைவர் கு. ரவிச்சந்திரன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். வாக்காளரின் உரிமை மற்றும் அவசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் ஆ.சிவானந்தம் அவர்கள் நன்றியுரை வழங்கினார். வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை திருமிகு ​ மு. தனபால்ää மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் -பாலக்கோடு அவர்கள் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். பேரணி தொடங்குவதற்கு முன்பாக “வாக்காளர் உறுதிமொழி” எடுக்கப்பட்டது.

பேரணியின்போது வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பாக வாசகங்கள் அடங்கிய பதாகைளை மாணவர்கள் கையில் ஏந்தி வந்தனர். துண்டு பிரசுரங்கள் வழியில் உள்ள கடைகளிலும், பொதுமக்களிடமும் வழங்கி வாக்காளர் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கல்லூரி வளாகத்தில் தொடங்கிய இப்பேரணி பேரூராட்சி அலுவலகம், பேருந்து நிலையம் மற்றும் மைதானம் வரை சென்று மீண்டும் கல்லூரி வளாகத்தை வந்தடைந்தது. காவல் அதிகாரிகள் பேரணியை சிறப்பாக நடத்த உறுதுணை புரிந்தனர்.

செய்தி:- சிங்காரவேலு, தர்மபுரி

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!