இன்று (20/12/2018 மதுரை மாநகர் “விபத்தில் மரணமில்லா டிசம்பர்” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மேலமாசிவீதி, நேதாஜி ரோடு சந்திப்பில் மதுரை அனுப்பானடியை சேர்ந்த திரு நாகராஜ் மற்றும் அவரது 4வயது மகன் ரித்திஷ் இருவரும் தலைகவசம் அணிந்து வந்தனர்., அவர்களை கவுரவப்படுத்தும் விதமாக சார்பு ஆய்வாளர்கள் திரு.பூர்ணகிருஷ்ணன் மற்றும் திரு.சின்னகருத்தபாண்டியன் ஆகியோர் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும் முன்னோடியாகவும் உள்ளார்கள் என்று பாராட்டி சிறுவனுக்கு கரடிபொம்மை மற்றும் இனிப்புகள் வழங்கினர்.
இதே போல் அனைவரும் தங்கள் குழந்தைகளை நேசிக்கும் எவரும் தலைகவசம் இல்லாமல் சவாரி செய்ய அனுமதிக்க வேண்டாம் என்று விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










