இந்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் பள்ளி, கல்லூரிகள், மகளிர் விடுதிகளில் எரிசக்தி சிக்கனம் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இயற்கை எரிவாயு அமைச்சக கருத்தாளர் ஏ.முனீஸ்வரி கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 22.02.2019 ல் ராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் எஸ். நந்தகோபால் தலைமையில் நடந்தது. ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் எஸ்.ஹாரூன் முன்னிலை வகித்தார். முகமது சதக் தஸ்தகீர் பி.எட்., கல்லூரியில் முதல்வர் முனைவர் எஸ்.சோமசுந்தரம் தலைமையிலும், ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட செயலாளர் எம்.ராக்லாண்ட் மதுரம் முன்னிலையில் நடந்தது.
பெருங்குளம் ரெட் கிராஸ் மருத்துவமனையில் டாக்டர் எம்.சுந்தர்ராஜன் தலைமையில் நடந்தது. ராமநாதபுரம் கல்வி மாவட்ட அலுவலர் அனுமதிபடி , ராமநாதபுரம் அறிஞர் அண்ணா நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் பயிற்றுநர் ஏ.தேவி உலக ராஜ் தலைமையில் நடந்தது. இதில் 8ஆம் வகுப்பு மாணவியர் கலந்து கொண்டனர்.
இராமநாதபுரம் அன்னை சத்யா பெண் குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மாவட்ட அலுவலர் துரைமுருகன் அனுமதியின் பேரில் சமூக ஆர்வலர் சுசரீத்தா தலைமையில் நடந்தது. இதில் பெண் குழந்தைகள் கலந்து கொண்டனர். 23/02/2019ல் ராமநாதபுரம் முஹமது சதக் ஹமீது கலை, அறிவியல் கல்லூரியில் முதல்வர் முனைவர் ஏ.ஆர். நாதிரா பானு தலைமையில் எரிசக்தி சிக்கனம் விழிப்புணர்வு நடந்தது. கல்லூரி மாணவிகளின் பெற்றோர், பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
இராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை, அறிவியல் கல்லூரியில் தாளாளர் செல்லத்துரை தலைமையில் நடந்தது. முதல்வர் எஸ் வி எஸ் அமானுல்லா முன்னிலை வகித்தார். இதில் செய்யது அம்மாள் அறக்கட்டளை கல்வி நிறுவனங்களின் அனைத்து வாகனங்களின் ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர். மண்டபம் முகாம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் ஈழ ஏதிலியர் மறுவாழ்வு கழக ஒருங்கிணைப்பாளர் கே.கே.மதிவதனம் தலைமையில் நடந்தது. இதில் இலங்கை அகதி பெண்கள் 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கருத்தரங்கில் புதுப்பிக்கவல்ல , புதுப்பிக்க இயலா ஆற்றல், எரிசக்தி சேமிப்பு அவசியம், பயன்படுத்தப்படும் பாத்திரங்களின் அளவுகள், சூரிய சக்தி பயன்பாடு, வாகன பராமரிப்பு முறை, டீசல் சேமிப்பு, எரிவாயு சேமிப்பு, எதிர்கால சூரிய சக்தி வாகனங்கள் ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டது. எரிசக்தி பயன்பாடு தொடர்பாக பங்கேற்றோரின் சந்தேகங்களுக்கு விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது. எரிசக்தி சிக்கன தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்தோருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. இரண்டு நாட்கள் 8 இடங்களில் நடந்த கருத்தரங்கு ஏற்பாடுகளை ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட செயலாளர் எம்.ராக்லாண்ட் மதுரம், பொருளாளர் சி.குணசேகரன், இணை செயலாளர் தி. ஜீவா, யூத் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட அமைப்பாளர் பேராசிரியர் ஆ.வள்ளி விநாயகம், யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர்கள் கே. ராஜமகேந்திரன் (செய்யது அம்மாள் கலை, அறிவியல் கல்லூரி), பி.பிரியங்கா (முஹமது சதக் ஹமித் கல்லூரி), பசுமை ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் அ.மலைக்கண்ணன், பெருங்குளம் கிராம நிர்வாக அலுவலர் அல்கா ருதீன் ஆகியோர் செய்தனர்.














You must be logged in to post a comment.