கோனேரி கிராமத்தில் பருத்தியில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோனேரி கிராமத்தில் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இளங்கலை இறுதியாண்டு படிக்கும் மாணவி வீ. தாமரைச்செல்வி விவசாயிகளுக்கு பருத்தியில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார். இந்நிகழ்ச்சியில் பருத்தியைத் தாக்கும் பல்வேறு விதமான பூச்சிகளை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பது குறித்தும்,பருத்தியில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையின் முக்கியத்துவம்குறித்தும் விளக்கினார்.மேலும் மாணவி தாமரைச்செல்வி தெரிவிக்கையில் இராமநாதபுரத்தில் விளையும் பணப்பயிர்களுக்குள் குறிப்பிடத்தக்க ஒன்று பருத்தி. பருத்தியை அதிகம் தாக்கும் பூச்சிகளான சிவப்புகறைப் பூச்சி,டஸ்கி பருத்தி பூச்சி, இலை சுருள் பூச்சி, சார் உறிஞ்சும் பூச்சி முதலியவற்றை கட்டுப்படுத்துவது என்பது கடினம். ஆகவே ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை என்பது அவசியம் பூச்சிதாக்கத்தினைத் தாங்கி வளரக்கூடிய ரகங்களை வளர்த்தல், பூச்சிக்கொல்லிகளுடன் விதை நேர்த்தி, பூச்சிக்கொல்லிகளை உபயோகித்தல், கிரைசோபர்லா இறைவிழுங்கி எட்டருக்கு 1000 விடுதல், இனக்கவர்ச்சி பொறி உபயோகித்தல், வெள்ளை ஈதொல்லைக்கு மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி பயன்பாடு, ஹெச். ஏ.என். பி. வி வைரஸ் வயலில் அறிமுகப்படுத்துதல் போன்ற பல்வகை மேலாண்மை முறைகளை கையாளும் பொழுது, பூச்சிகளின் தாக்கமும் வீரியமும் குறைந்து, அதிகமாக மகசூல்பெறலாம் என்றார். இதில் கிராமப்புற விவசாயிகள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!