தெற்குத்தெரு ஜமாத் சார்பாக புதுத்தெரு நூரானியா ஸ்கூல் வளாகத்தில் கொரோனா விழிப்புணர்வு மருத்துவ முகாம்…

இராமநாதபுரம் ஆட்சியரின் வழிகாட்டுதலின் பேரில் கீழக்கரையில் அனைத்து ஜமாத் சார்பாக கொரோனோ விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக 2வது நாளாக இன்று (02|07|2020) தெற்குத்தெரு ஜமாத் சார்பாக புதுத்தெரு நூரானியா ஸ்கூல் வளாகத்தில் கொரோனா சம்பந்தமான மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த முகாமிற்கு பள்ளி பொறுப்பாளர் மற்றும் MYFA உறுப்பினர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். மக்கள் திளாக வந்து பயனடைந்தனர். இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக செல்லும் இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முக கவசம் (Face Mask) அணிதலின் அவசியம், கைகளை  கிருமி நாசினி (Sanitizer) மூலம் சுத்தம் செய்வதின் முக்கியத்துவம் போன்றவை வலியுறுத்தப்பட்டது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!