இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ், சிவகங்கை மண்டல பேருராட்சிகளின் உதவி இயக்குநர் ராஜா அறிவுறுத்தல் படி மண்டபம் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த இந்த முகாமிற்கு செயல் அலுவலர் மஞ்சுநாத் தலைமை வகித்தார்.
முகாமில் கலந்து கொண்ட பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டு, நிலவேம்பு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. மேலும் வீடுகளில் குடிநீரை மூடி பராமரிக்க வேண்டும். குப்பை தேங்க விடாமல், கொசு புழுக்கள் உற்பத்தியை தவிர்க்க கழிவு நீர் தேங்க விடாமல் பார்த்து கொள்ள வேண்டும் என அறிறுத்தப்பட்டது.
மண்டபம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் மெய்.ராமச்சந்திரன், பேரூராட்சி இளநிலை உதவியாளர் சு.முனியசாமி ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை செய்தனர்.
மேலும் உச்சிப்புளி வட்டார மருத்துவ அலுவலர் சுரேந்திரன், மண்டபம் அரசு ஆரம்ப சுகாதார நிர்லைய மருத்துவ அலுவலர் ராஜா ஜவஹர்லால் ஆகியோர் அறிவுறுத்தல் படி மண்டபம், காந்திநகர், வலையர்வாடி, சுந்தரமுடையான் துணை சுகாதார மையங்களில் தொழு நோய் அறிகுறிகள் குறித்து களப்பணியாளர்கள் மூலம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தொழுநோய் அறிகுறி கண்டறியப்பட்ட 2 மாணவிகளுக்கு 6 மாத ஆரம்ப கால தொடர் சிசிச்சைக்கு பரிந்துரைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.





You must be logged in to post a comment.