மதுரை நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளையின் தலைவர் குருசாமி, மதுரை மாநகர் காவல்துறை மதுவிலக்கு அமலாக்கத்துறை பிரிவு ஆய்வாளர் சேது மணி மாதவன், ரெட் கிராஸ் ஆகியோர் இணைந்து, அவர்கள் தலைமையிலும், மதுரை மாநகர் காவல்துறையே வடக்கு இணை ஆணையாளர் அனிதா, கலால் உதவி ஆணையாளர் ராஜகுரு, கலால் தாசில்தார் ஆனந்தி ஆகியோர் முன்னிலையிலும், போதையில்லா தமிழகம், விபத்தில்லா மதுரை என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி, மதுரை தமிழ் அன்னை சிலை வரை நடைபெற்றது, இப்பேரணியில் அமெரிக்கன் கல்லூரி, அப்போலோ நர்சிங் கல்லூரி, தியாகராஜர் கலைக்கல்லூரி, மன்னர் கலைக் கல்லூரி சார்ந்த NSS, NCC மாணவ, மாணவிகள் மற்றும் ரெட் கிராஸ் தன்னால்வர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு, போதை இல்லா தமிழகம் உருவாக்குவோம், விபத்தில்லா மதுரையை உருவாக்குவோம், மது ஒரு உயிர் கொல்லி போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது,

You must be logged in to post a comment.