இராமநாதபுரம் : குழந்தை உரிமைகளும் நீங்களும் வழிகாட்டல் படி, ராமநாதபுரம், சாயல்குடி பகுதிகளில் ஒற்றை பெற்றோரின் குழந்தைகள் உயர் கல்வி உறுதிசெய்வதற்கான விழிப்புணர்வு கூட்டம் ரூரல் வொர்க்கஸ் டெவலப்மென்ட் சொசைட்டி சார்பில் 1 வாரம் நடந்தது.
ரூரல் வொர்க்கஸ் டெவலப்மென்ட் சொசைட்டி இயக்குனர் சத்தையா தலைமை வகித்தார். மரியஸ்டெல்லா வரவேற்றார். குந்தைகளுக்கு முழு பாதுகாப்பு, தன்னம்பிக்கை ஏற்பட குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்ற அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என சாயல்குடி காவல் சார்பு ஆய்வாளர் கார்த்திக் பேசினார். குழந்தைகளின் அன்றாட செயல்களை பெற்றோர் கண்காணித்து நண்பராக இருந்தால் அவர்கள் எவ்வித பிரச்னையின்றி அவர்களின் இலக்கை குழந்தைகள் அடைந்திட முடியும் என திட்ட ஒருங்கிணைப்பாளர் கனகவள்ளி பேசினார். குழந்தைகள் கல்லூரி வரை படிக்க அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய பெற்றோர் உறுதியாக இருக்க வேண்டும் என சமூக நலத்துறை பணியாளர் மோகனப்ரியா பேசினார். குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கும் வழிகள் குறித்து ஆவணத் தொகுப்பாளர் ராஜமணி, கணக்காளர் நிர்மலா, ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் செய்துகொள்வது குறித்து கள ஒருங்கிணைப்பாளர்கள் காமாட்சி, புனிதா, ராஜாத்தி, சத்யா, கன்னிம்மாள் ஆகியோர் வழிகாட்டினார். இதில் 100 க்கும் மேற்பட்ட ஒற்றை பெற்றோர் கலந்துகொண்டனர். பாக்யலட்சுமி நன்றி கூறினார்..
You must be logged in to post a comment.