இராமநாதபுரம், நவ.5
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஹமது சதக் பொறியியல் கல்லூரி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் முதன்மை செயல் திட்ட மேலாளர் சிவகுருநாதன் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், ஒவ்வொரு ஆண்டும் அக் 30 முதல் நவ.5 வரை ஊழலுக்கு எதிராக பள்ளி, கல்லூரி மாணவர்களின் பேரணி மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்றார். கல்லூரி முதல்வர் நிர்மல் கண்ணன், துணை முதல்வர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மேலாளர் முரளி வரவேற்றார். பேரணியில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஊழல் ஒழிப்பு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திச் சென்றனர். கீழக்கரை கடற்கரையில் துவங்கிய பேரணி கீழக்கரை காவல் நிலையம் பகுதியில் நிறைவடைந்தது. கல்லூரி முன்னாள் மாணவர் சங்கச்செயலர் பாலசுப்ரமணியன், உடற்கல்வி இயக்குநர் சுரேஷ் குமார், மக்கள் தொடர்பு அலுவலர் நஜ்முதீன், பேராசிரியர்கள், இந்தியன் கார்பரேஷன் பணியாளர்கள் கலந்து கொண்டனர் கல்லூரி மேலாண் துறைத்தலைவர் அப்பாஸ் மாலிக் நன்றி கூறினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









