உசிலம்பட்டியில் படிக்கும் வயதிலேயே பள்ளிக்குழந்தைகளுக்கு இயற்கை உணவின் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில் பள்ளியில் இயற்கை உணவுத் திருவிழா நடைபெற்றது..

உசிலம்பட்டியில் படிக்கும் வயதிலேயே பள்ளிக்; குழந்தைகளுக்கு இயற்கை உணவின் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில் பள்ளியில் இயற்கை உணவுத் திருவிழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மதன் பிரபு ஏற்பாட்டில் இயற்கை உணவுத் திருவிழா நடைபெற்றது. இதில் இயற்கை உணவு அருந்தினால் அதன் நன்மைகள் குறித்து மாணவ மாணவிகளுக்கு எடுத்து கூறும் வகையில் இந்த உணவுத் திருவிழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் பாரம்பரிய உணவின் நன்மைகள் குறித்து மாணவ மாணவிகளிடம் விளக்கமளித்தார். நம் முன்னோர்களின் இயற்கை உணவான கம்மங்கூழ் ராகி மோர் உள்ளிட்டவைகளும் மற்றும் முளைகட்டிய பயிர்களின் அவசியங்கள் குறித்தும் நன்மைகள் குறித்தும் மாணவ மாணவிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டது இதில் ஆசிரியர்கள் பள்ளி மாணவ மாணவிகள் உசிலம்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் தலைவர் ராம் பிரகாஷ் மேலாளர் செந்தில்குமார் பொருளாளர் சேகர் ஆகியோர் பங்கேற்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!