இராமநாதபுரம், செப்.30 – இராமேஸ்வரம் அரசு மேல் நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் 7 நாள் சிறப்பு முகாமில் தூய்மை பணி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, போதை பொருட்கள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்பணர்வு, நான் முதல்வன் திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக உலக வெப்பமயமாதல் விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது.
நாட்டு நலப்பணித்திட்ட ராமநாதபுரம் மாவட்ட தொடர்பு அலுவலர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார். பொறுப்பாசிரியர் பழனிச்சாமி வரவேற்றார். பஜ்ரங்கதாஸ் பாபா சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சீதாராம் தாஸ் பாபா தொடங்கி வைத்தார். ராமேஸ்வரம் சங்குமால் கடற்கரை பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். நுகர்வோர் இயக்க துணைத்தலைவர் தில்லைபாக்கியம், சுற்றுசூழல் ஆர்வலர் முருகேசன், ஜூனியர் ரெட் கிராஸ் ஆசிரியர் தினகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாணவர் நாக ஆனந்த் நன்றி கூறினார்.


You must be logged in to post a comment.