ராமநாதபுரத்தில் பசுமை தமிழ்நாடு தினம்: கொண்டாட்டம்..

இராமநாதபுரம், செப்.24- இராமநாதபுரம் வனக்கோட்டம் சார்பில் பசுமை தமிழ்நாடு தினம் 2023 சேதுபதி அரசு கலைக்கல்லூரியில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மாவட்ட வன அலுவலகத்தில் இருந்து கிளம்பிய விழிப்புணர்வு நடை பயணம் அச்சுந்தன்வயல் சேதுபதி அரசு கல்லூரியில் நிறைவடைந்து.

இதில்  பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். நவாஸ் கனி எம்பி, மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு,  வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஷ் சுதாகர், மாவட்ட வன அலுவலர்
ஹேமலதா,  அச்சுந்தன்வயல் ஊராட்சி தலைவர் சகிகலா லிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பசுமை தமிழக இயக்கம் மூலம் ராமநாதபுரம் மாவட்ட வனத்துறை சார்பில் 5.5 லட்சம் மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு விலையின்றி வழங்கப்பட உள்ளது. இதன் தொடக்கமாக 2,500 மரக்கன்றுகள் இன்று நடப்பட்டது.
ராமேஸ்வரம் கிராம வனக்குழு மூலம் பாரையடி மகளிர் சுய உதவிக் குழுவிற்கு சூழல் அங்காடி ஆணை மற்றும் மாதிரி சாவி வழங்கப்பட்டது.
எம் கிருஷ்ணாபுரம் வனக்குழு சார்பில் கோகுலம் மகளிர் சுய உதவிக்குழு பனை சார்ந்த மகசூல் பொருட்கள் நடப்பாண்டு சேகரம் செய்துகொள்ள ஆணை வழங்கப்பட்டது.

மரம் நடுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அனைத்து பள்ளிக் குழந்தைகள் விழாவில் பங்கு பெற்ற அனைவருக்கும் விழிப்புணர்வு ஒட்டிகள் வழங்கப்பட்டது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!