நினைவலைகள் எழுதிய ஆசிரியருக்கு அமெரிக்கா தனியார் பல்கலைக்கழகம் சார்பாக விருது..

சில மாதங்களுக்கு முன்னர் கீழக்கரை ஜதக்கத்துன் ஜாரியா வளாகத்தில் “நினைவலைகள்” எனும் புத்தகம் வெளியிடப்பட்டது. இப்புத்தகத்தை நெய்னா என்று அழைக்கப்படும்  சோனகன் மஹ்மூது எழுதியுள்ளார்.

இப்புத்தகம் மணிமேகலை பிரசுரம் சார்பாக வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து மணிமேகலை பிரசுரம் லேனா தமிழ்வானணின் பரிந்துரையின் பேரில் நினைவலைகள் நூலுக்கான விருது அறிவிக்கப்பட்டது. இத்தனியார் பல்கலைக்கழகம் மூலம் லேனா தமிழ்வாணன் மற்றும் பலர் டாக்டர் பட்டம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

நினைவலைகள் நூலுக்கான விருது விழா நேற்று மதுரையில் உள்ள தனியார் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் அமெரிக்க உலக தமிழ் பல்கலைக்கழகத்தின் தலைவர் செல்வின் வழங்கினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!